உனக்கானவன் நான் என்று சொல்லடி 555

என்னுயிரே...


அந்திமாலை நேரம்
மாலை தென்றல் வீச...

குளத்துக்குள்
கல்லெறிந்து கொண்டு ...

குளக்கரையில்
நான் அமர்ந்திருக்க...

அந்தி மல்லி கூட்டம் போல
உன் தோழிகளோடு...

நீ வருவாய்
சில்வர்
கு
ம் கொண்டு...

உன் தோழிகளுக்கு
நீர் நிரப்பி நான் கொடுக்க...

உதட்டை சுழித்து
கொஞ்சி
கொண்டு இருப்பாய்...

உன் குடம் நிரப்பி
நான் கொடுக்க...

உன் இடுப்பில்
வாங்கி வைக்குமுன்...

அரை வினாடியில் கைமாறும்
உன் வீட்டு பலகாரம்...

என் கைகளுக்கு உன்
தோழிகளுக்கு தெரியாமல்...

இதழ்களில் புன்னகையும்
கண்களில் காதலும் ததும்ப...

இரண்டடிக்கு ஒருமுறை திரும்பி
பார்த்து கொண்டே செல்வாயடி கண்ணே...


பகலெல்லாம்
சுற்றி திரிந்தாலும்...

மாலையில் கூடு திரும்பும்
பறவையை போல...

பகலெல்லாம்
நான்
சுற்றி திரிந்தாலும்...


மாலையில் உன்
னை காண
தினம்
காத்திருப்பேனடி குளக்கரையில்...

இப்போது பல நாட்களாய்
நான் காத்திருக்கிறேனடி...

பல நேரங்களில்
நான் தனிமையில்...

சில நேரங்களில் ஒற்றை
காலுடன் கொக்கும்...

கொக்கோ
உணவை தேடி...

நானோ உன்னை
காண
காத்தி
ருக்கிறேனடி...

மீண்டும் என்னருகில்
வந்துவிடுவாயா நீ...


ஊராருக்கு

நான் ஜித்தன்...

உனக்கு நான் யாரென்று
நீ வந்து சொல்லடி...

ஊராருக்கு
உனக்கானவன்
நான் என்று.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (23-Jan-21, 4:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 347

மேலே