மனித மிருகங்கள்

மனித மிருகங்கள்

பிணம் தின்னும் கழுகுகளும்.. வெறிகொண்ட மிருகங்களும்..
மனிதன் என்ற பெயரில் இங்கு நடமாடுது ..

அது பூத்துக்குலுங்க வேண்டிய பிஞ்சு மொட்டுக்களை,
நசுக்கி கசக்கி எரிகின்றது ...

மூன்று வயது குழந்தையும் ,ஆறு வயது சிறுமியும் ..
தனக்கு நடப்பது என்னவென்று தெரியாமல் தவிக்கின்றது ...

வேட்டையாடும் மிருகங்களின்,
கோரப் பிடியில் சிக்கிக் கொண்டு,
தப்பிக்க வழியின்றி திகைக்கின்றது ..

காக்கவேண்டிய கடவுளும் கல்லாகி போனதால் ..
மீட்க வேண்டியவர்களும் முடமாகி போனதால் ..

சாதிக்கப் பிறந்த சாதனை செல்வங்கள்
மண்ணாகி போகின்றன ..!!

எழுதியவர் : RIYAS QUOTES (23-Jan-21, 6:18 pm)
சேர்த்தது : Riyas quotes
Tanglish : manitha mirukangal
பார்வை : 1535

மேலே