கார்ணனுக்கு நிகரில்லை

கார்ணனுக்கு நிகரில்லை

நேரிசை வெண்பாக்கள்

கர்ணனுடன் வுண்மை அரிச்சந்தி ரன்வள்ளல்
தர்பணம் முந்நிற்கா அற்பணமே -- கர்வமாகா
உர்வுயர்ந்த உண்மை அரிச்சந்தி ரன்பாரும்
கர்ணனுக்கு கீடா வனோ

உர்வுயர்ந்த. =. உயர்த்த வலிமை

சத்தியம் பேசும் அரிச்சந்திரன் கர்ணன் ஆகிய இருவரும் தமிழின்
இடைச்சங்க வள்ளகள். இருப்பினும் கர்ணனுக்கு நிகர்யென்று
அரிச்சந்திரன் கர்வமாய் நினைக்க முடியாது. அவன் எவ்விதத்
திலும் கர்ணனுக்கு ஈடாகான்.


வள்ளலாம் மூவேழும் கர்ணனாகார் சூரிய
வள்ளல் மகனல்ல வாயிவன் -- கிள்ளியல்ல
அள்ளிக் கொடுக்காது மலையைக் கொடுத்தபோதும்
கொள்ளை யெனககொண் டனர்


குண்ட லமுடன் கவசம் அறுத்துவாங்கிக்
கொண்டான் விசயனின் இந்திரன்--. கண்ணனும்
வண்டாகி யோரம்பு குந்தியோ ரம்பெனவே
கொண்டு அழித்த னரே

நாகபாசம் வீசுகையில் கண்ணபிரான் தேரழுத்த
வேகபாசம் வீணாகப் போனதே -- ஆகப்பின்
சல்லியனும் தேரிறங்க ஆயுதமி லாவேளை
அல்லிபதி அம்புதொடுத் தான்



தொடுத்தென்ன பானம் உயிர்நீங்க வில்லை
அடுத்துக் கிழக்கண்ணன் வந்தான் -- படுத்திக்
கொடுகவுன் புண்ணிமெனக் கண்ணனும் கேட்க
விடுத்தான் உயிரைவள் ளல்

இருப்பதைக் கேட்க எடுத்துத் தருவன்
விரும்பி முடிந்ததை செய்வன் - விரும்பி
உயிருடன் புண்ணியத்தை யும்சேர்த்துத் தந்தான்
அயிலம்பு கர்ணமாமன் னன்

அயிலம்பு. = கூரிய அம்பு

.........

எழுதியவர் : பழனிராஜன் (28-Jan-21, 2:13 pm)
பார்வை : 68

மேலே