தங்கச்சி

தங்கச்சி
இவள் எப்போதும்
என் கட்சி
இவள் என்மீது பாசம் பொழியும் செல்லப் பட்சி
எங்கள் வீட்டின் கிளிப்பேச்சு
என் தாயின் அசல் அச்சு
இவளிடம் தான் எங்கள் வீட்டின் அதிகார ஆட்சி
இவள் என்றென்றும்
எங்களின் உயிர்மூச்சு..

தங்கை உள்ள அண்ணனெல்லாம்
பாக்யவான்களே
ஏனெனில் அண்ணன்களை தாய்ப்போல் கவணித்துக்கொள்பவர்கள் தங்கைமார்களே...

வாழும் காலத்தில் அப்படி என்ன செய்து விட்டோம் இந்த தங்கைமார்களுக்கு
இப்படி பாசத்தை கொட்டுகிறார்களே...

தாய்கூட தன் பிள்ளைக்குப் பாலூட்டி
உத்தரவின்றி உறங்கிவிடுகிறாள்
தங்கைமார்களோ
நடுநிசியில் வீடுதிரும்பும் அண்ணன்களுக்கு
அமுது படைத்து
உத்தரவு கேட்டப்பின்பே உறங்கச் செல்கிறார்கள்..

முன் ஜென்ம புண்ணியமோ என்னவோ
எனக்கு இப்பிறவியில் தங்கைகள் ஏராளம்..

✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (1-Feb-21, 9:24 am)
Tanglish : thaNgkassi
பார்வை : 200

மேலே