பின்னிப் பிணையும் பெருவாழ்வு = இயல்தரவிணை கொச்சகக் கலிப்பா
அன்றில் பறவையென அன்பால் இணைந்தொன்றாய்
இன்பம் விளைவிக்கும் ஏந்திழையின் பேரன்பில்
என்றும் திளைத்தபடி இல்லறத்தைக் கொண்டுசெலும்
தன்மை படைப்பவர்க்கே தக்கதொரு வாழ்விருக்கும்
ஒன்றின் கரம்பற்றி ஒன்றா மனத்துடனே
இன்னும் ஒருத்தியை எண்ணிக் களிக்கின்ற
தன்மை படைத்தத் தரங்கெட்டப் பேர்களுக்குப்
பின்னிப் பிணையும் பெருவாழ்வு வாய்ப்பதில்லை