கர்பப்பையா சிறையா சொர்க்கமா
கருவில் அன்னையே என்னை சுமந்தாய்
இது என்ன 'இருட்டறை' எத்தனை நாள்
அடைபட்டு கிடக்க.... வெளியில் வந்தேன்
வெளிச்சம் வெளிச்சம் எங்கும் என்று
பார்ப்பதெல்லாம் ஒளிமயம் என்று எண்ணி
வளர்ந்தேன் வாழ்ந்தேன் ..... இது வஞ்சகர்கள்
நிரம்பி வழியும் உலகம் என அறிந்தபோது
தாயே என்னை ஏன் விடுவித்தாய் கர்பப்பையிலிருந்து
உலகம் அறியாமல் இருட்டில் அங்கு வாழ்ந்தேன்
அதுவே சொர்கம் என்று தோன்றியது