காற்றின் மொழி
அழகான பெண்ணை
சந்தித்தேன்...
அதன்பின் என் சிந்தனை
எப்போதும் அந்த பெண்ணை
நினைத்துதான் ...!!
ஒரு நாள் அவளிடம் பேசினேன்
பதிலுக்கு அவளும் பேசினால்
தன் புன்னகை மொழியால்...!!
மீண்டும் ஒரு முறை
அவளை சந்தித்து பேசினேன்
இந்த முறை அவள் பேசினாள்
ஆனால் எனக்குதான்
அவளின் பேச்சு
புரியவில்லை ..!!
பிறகுதான் புரிந்தது
அவள் காற்றின் மொழி
மட்டுமே பேசும்
ஊமை மொழியாள் என்று
அறிந்து கொண்டேன் ..!!
அழகையும். அறிவையும்
கொடுத்த இறைவன்
ஒரு மனிதனின் ..
அடிப்படை உரிமையான
பேச்சு உரிமையை
அந்த தேவதைக்கு
ஏன் கொடுக்கவில்லை ...??
இறைவன் நல்லவனா
இல்லை கெட்டவனா
என்று புரியாமல் ...!!
நான் இப்போது
பேச்சில்லாமல் நின்றேன்..!!
--கோவை சுபா