தாயே தெய்வம்

தாயே தெய்வம்

நேரிசை வெண்பாக்கள்

பிள்ளை பெறத்துடித்த வென்தாயை சூதுபேசி
அள்ளியெனைத் தந்தாள் மருத்துவச்சி --. கள்ளக்
குறுநகை சிந்தியே யோரமாய் வாங்கி
சிறும டிசாய்த்தனள் தாய்

செவிலி வசமீயா தென்தாயு மன்பாய்
தவிக்குமுன்கா மப்பால் தருவள் -- அவிழ்தூட்டும்
முன்னே அமிர்தமாய் கொங்கைப்பால் ஈந்துமே
என்னை வளர்த்தா ளவள்

பணியை சடுதி முடித்துநன்நீ ராட்டி
நணிமையில்மை வைப்பள் திலதம் -- துணிந்த
யணிதுணி மெல்லியனிச் சையுடையும் பூட்டி
யணிகலன் பார்ப்ப ளழகு


நீராட்டி மையிட்டு நெற்றித் திலதமிட்டு
சீராட்டிக் காத்தாளென் அன்னையும் -- பாராட்டாள்
சிற்றடியால் தத்தடி யிட்டிடப் பின்காப்பள்
கற்றுவீதி ஓடியாட வும்

தாயான அன்னை அவிழ்தமூட்டி ஊஞ்சலாட்டி
வாயார முத்தமிட தூக்குவள் -- தாயாராம்
நற்பண்பு சொன்னவளுக் காகுமாமுப் பத்திரண்டு
அற்பசீர்கள் போற்றிவாழ்த்த வும்


.......

எழுதியவர் : பழனிராஜன் (4-Feb-21, 10:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 844

மேலே