உழைப்பில் சிறுவன்

உழைப்பில் சிறுவன்

கற்றோருக்கு செல்லும்
இடமெல்லாம் சிறப்பு,
நல்லோருக்கு வாழும்
இடம் தேவை பொறுப்பு.

ஒரு கூட்டம் வீழ்கின்றது.
ஒரு குற்றம் வீழ்த்துகின்றது.

ஆக்கம் கொண்டோர் பிள்ளை,
ஆதிக்கத்தால் ஆளுமை கொண்டு;
வறுமை கொண்டோர் பிள்ளை,
எடுபிடியாய் எடுப்பார் கை பிள்ளையாய்;

சீமான் வீட்டு பிள்ளைக்கு
சீருடையின் வண்ணம்.
ஏழை வீட்டு பிள்ளைக்கு
ஏற்ற தாழ்வே எண்ணம்.

சிறகடிக்கும் பருவத்தில்
உழைப்பில் சிறுவன்,
வயிற்று பசி குறையும்
அறிவு பசி கூடும்.

பணம் நிறைந்தவன் பகட்டாய் வாழ
பணம் இல்லாதவன் பகடைக்காயா உருட்ட?

மேக மூட்டங்கள் ஒன்று கூட மழை மண்சேரும்
பேதமின்றி,

மனிதனுக்குள்ளே ஏனோ?
இருமாற்றமாய் பேதம்கொண்டு
வேறுபாடும் வேண்டாதகேடும்.

- ஸ்ரீ ஜனகா

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (4-Feb-21, 9:25 am)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
Tanglish : uzhaippil siruvan
பார்வை : 125

மேலே