முகநூல் பதிவு 294

ஊர்மிளை .......இராமாயணத்தில் இவள் ஒரு மாபெரும் தியாகியே........

இலட்சுமணன் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின் போது இராமன் சீதைக்கு இரவு பகல் பாராமல் தடங்கல் இன்றி சேவை செய்ய தன் இளம் மனைவி ஊர்மிளையை அரணமனையிலேயே விட்டுச் சென்றான்.......வனத்தில் நித்திரா தேவியிடம் வேண்டுகிறான்......முழுதாய் சேவை செய்ய தனக்கு ஊன் உறக்கம் வேண்டாம் என.......நித்திரா தேவி அருள் தந்தாள்.....ஆனால் ஒரு நிபந்தனையுடன்.....உன் உறக்கத்தை வேறு எவரேனும் ஏற்க வேண்டும் என......இலட்சுமணன் தன் மனைவி ஊர்மிளையைக் கை காட்ட.......நித்திரா தேவி அவளை அணுக .....ஊர்மிளை கணவனின் ஆணையை ஏற்றுக் கொண்டாள்......தன் வாழ்வில் பதினான்கு ஆண்டுகள் இரவும் பகலும் உறக்கத்தில் கழித்தாள்.....தன் வாழ்நாளில் பதினான்கு ஆண்டுகள் இளம் வயதில் கணவனையும் பிரிந்து உறக்கத்தில் கழித்த ஊர்மிளை இராமாயணத்தில் நம் கண்ணில் படாத மாபெரும் தியாகி அன்றோ ..........

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (4-Feb-21, 7:18 pm)
பார்வை : 41

மேலே