அருகம்புல் சாறின் மகத்துவம்
அதிகாலை அருந்து அருகம்புல் சாறு
ஆயுள் கூடிடும் நலமாய் நூறு
உடல் நச்சுக்களை அடியோடு நீக்கிடும்
குடல் புண்களை எளிதாய் ஆற்றிடும்
வெப்பத்தை சீராக்கி உடலை காத்திடும்
பித்தத்தை சமன்செய்து நோய்களை போக்கிடும்
சிறுநீரகப் பாதை அழற்சியை தடுத்திடும்
சிவப்பணுக்களை குருதியில் பெறுக்கிடும்
அனுபவத்தில் இது யான் கண்ட உண்மை
அனைவரும் மேற்கொண்டால் பெற்றிடலாம் நன்மை!