நலம் நாடும் வேண்டுதல்

எப்போதும் உயர்வை நோக்கிய தூண்டுதலும்
எப்போதும் அன்பையே ஆதாரமாக்கிய தீண்டுதலும்

என்றும் உறவுகளோடு மண்டுதலும்
எதார்த்த விதிகளுடன் ஒண்டுதலும்

எளிதாக துன்பத்தைக் கடக்க தாண்டுதலும்
எளியோருக்கு கருணைக்காட்ட அண்டுதலும்

எதற்கும் அஞ்சாது அதர்மத்தை சுண்டுதலும்
எவருக்கும் ஒஞ்சாது உதவிட முண்டுதலும்

எவருக்கும் வலியை தராத சீண்டுதலும்
ஏதுவாய் உண்மை வெளிபட நோண்டுதலும்

எடுத்த செயல் வெல்ல வைராக்கியம் பூண்டுதலும்
ஏடுகளை அகழ்ந்து ஆராய்ந்து தோண்டுதலும்

எல்லோருக்கும் நலம் நாடும் வேண்டுதலும்
என்றென்றும் சிந்தையில் வேண்டும் இறைவா!

எழுதியவர் : வை.அமுதா (4-Feb-21, 7:22 pm)
பார்வை : 87

மேலே