காதலெனும் காட்டாறு

காதலெனும் காட்டாறு


நேரிசை வெண்பா

நீபோ குமிடமெலா மென்மனம் கூடவரும்
தீபோல்நான் வாடினும் காக்குமுயிர் -- நீபோனால்
உன்பின்னே என்கண்ணும் ஒன்றிட என்செயும்
இன்காட்டாற் றின்வெள் ளமும்

காதலன் பொகுமிடமெலாம் மனம் கூடவே போகும் பிரிவு
அனலாக வாட்டினும் உயிர் நிலைக்கும். ஆனால் என்மனம்
போல என் கண்களும் அவருடன் சென்றால் பிரிவு எனும்
காட்டாறு என்னை ஒன்றும் செய்யாது

குறள். 10/9


.....?

எழுதியவர் : பழனிராஜன் (4-Feb-21, 7:52 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 85

மேலே