நடிகர் திலகத்திற்கு

அன்பும் அறிவும் கொண்ட மகன் - இவ்
அகிலமெல்லாம் புகழ் கடல் கண்ட மகன்
இன்புறும் கதைகளில் நடித்த மகன்
அவன் யாவரும் போற்றிடும் சாந்த மகன்.

அடிமை நிலை கண்டு வாடியவன் - ஒரு
அன்பு நதி என ஓடியவன்
குடி சூது வஞ்சம் களைந்த மகன் - வெறும்
வைய்யப்புகளினை சூழ்ந்த மகன்.

பொய்யும் பொறாமையும் வென்ற மகன் - வெறும்
போலித்தனத்தையே கொன்ற மகன்
நடிப்பில் கொள்கை படைத்த மகன் - அவ்
நடிப்பில் பெரும் பெயர் பெற்ற மகன்.

கலைத்தாய் நல்லருளால் ஈன்ற மகன் - அவர்
டாக்டர் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற மகன்
பாரதம் காத்திட பிறந்த மகன் - அவர்
பார் புகழ சேவை செய்த மகன்.

காமராஜர் சொற்படி வாழ்ந்த மகன் - காங்கிரஸ்
கட்சியை துணையாக கொண்ட மகன்
அன்னை இந்திராவின் ஆசி பெற்ற மகன் - அவர்
யாவரும் போற்றிடும் தெய்வ மகன்.

நடிப்பிற்கு இலக்கணம் படைத்த மகன்
அவர்தான் நம் பாரதம் போற்றிடும் நடிகர் திலகம் அவர்
உழைப்பால் உயர்ந்த உத்தமன் - அவர்
உலகிற்கு வழி காட்டிய மகன்.

தமிழ் தாய் அன்பு உனக்குண்டு - நம்
தாயகம் காப்பதில் பங்கு உனக்குண்டு
இந்திய திரு நாட்டின் அடிச்சுவட்டில் - உன்
காலடி பட்ட இடம் மதிப்புண்டு

கலைச் சேவை செய்தவர் பலர் உண்டு - அதில்
உனக்கிணை இப்புவியில் யார் உண்டு
பிரான்சு நாடு மக்களுக்கும் - உன்
காலடி முத்தமிட ஆசை உண்டு

அதுதான் அந்நாட்டு மக்கள் அரவணைப்பால்
செவாலியர் (மாவீரன்) எனும் பட்டம் வந்ததன்றோ
மறக்க முடிய உன் சேவையினை - அகம்
மகிழ்ந்தே உனை நான் வணங்குகிறேன்!

எழுதியவர் : Selvamani (4-Feb-21, 9:39 pm)
சேர்த்தது : Jinitha
பார்வை : 32

மேலே