கல்வெட்டுக்கள்

கல்வெட்டுகளில் காணும் பொருள்
நம் சிந்தனைக்கெட்டாதவை
அதைக் கண்டு வியக்கும் நாம்
நிஜம் காண ஏங்குகிறோம்,
தலைமுறைகள் மாறும் போதும்
கல்வெட்டுகளில் எழுதப் படும் பொருள்
மாறாது மறையாது நிஜம் அதுவே
அரசன் ஆட்சி மாறியும் மாறாது
எழுதியது எழுதியபடியே .
மாற்றங்கள் தேடும் மனிதன் வாழ்வில்
எது/ எப்படி/ ஆட்சியும் அரசனும்
என்பதில்
இதுதான் இப்படித்தான் என்பதை
கல்வெட்டுகளில் காணமுடிகிறது.
கல்வெட்டுகளின் எழுத்து
நேற்று இன்று நாளை
என்றும் அழியாத சின்னங்கள்.

எழுதியவர் : பாத்திமாமலர் (26-Jan-21, 11:14 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 107

மேலே