சொல்லாமல் சொல்

அது ஒரு அழகிய மாலை பொழுது...
மிதமான மாலை கதிரவன் மறைந்து, பனி சில்லென வீச ஆரம்பித்தது....

சலசல என்று கொஞ்சும் சலங்கை திசை திருப்ப, மயில் என ஓடி வந்தாள் pranakshi....

அவள் ஓடி வர, ரயிலும் வர,
அவளை பின்னி பிணைந்து பின் தொடர்ந்து வந்தது 10 விழிகள்....

எதிர் திசையில் மேலும் 4 விழிகளும் அவர்களுடன் கை கோர்த்து கொண்டது....

Pranakshi அலைபேசி சிணுங்கி கொண்டே இருந்தது....
கண்களில் படபடப்பும், பரிதவிப்பும் கலந்து சற்றே ஓட்டம் பிடிக்க தொடங்கினாள் pranakshi...

மாலை மயங்கும் நேரத்தில், சாரல் கொஞ்சம் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியது....

பட்டாம்பூச்சி போல கண் இரண்டையும் பறக்க விட்டு, முககவசம் இன்றி முகத்தை தன் துப்பட்டாவினால் மறைத்திரிந்ததால் அவள்!!!!!

திரும்பி பார்க்காமல் தன்னுடைய ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடி, தன் இருக்கையை அடைந்தாள்.

அலைபேசியில் அழைத்த எண்னை பார்த்ததும், எடுத்து தன்னுடைய இருக்கை எண்ணை கூறி விட்டு அலை பேசியை உடைத்து தூக்கி எறிந்தாள் pranakshi!!!!!

ரயிலும் ஓவென்று ஓலம் இட்டு, நகர தொடங்கியது...

அவளை பின்தொடர்ந்த 10, 4 விழிகளும் வேகம் பிடித்தது....

தன் கழுத்தை மெல்ல தடவினால் Pranakshi..... மஞ்சள் ஈரம் காயாமல் அவள் வியர்வையில் நனைந்து பின்னி பிணைந்து கிடந்தது பொன் தாலி.....

ரயில் நகர, சற்றே நிம்மதி கிடைத்தது அவளுக்கு....... இரண்டு கண்களையும் இரண்டு கைகளால் புதைத்து கொண்டு,
சொல்லாமல் சொன்னது!!! அவள் விழிகளில் வழிந்த நீர், அவளின் ஏக்கத்தை!!!!!!

அவளை விட்டு விட்டோமே என்று 10 விழிகளும் ஏமாற்றமும், கோபத்துடன் ரயில் நிலையத்தை விட்டு சென்றனர்.... ஆனால், அந்த 4 விழிகளில் 2 விழிகளில் சிக்கிக்கொண்டாள் Pranakshi......

அவளின் சந்தேஷம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.......
ஜன்னல் ஓரத்தில் நிலா எட்டிப் பார்த்தது போல,
அவள் தன் முகத்தை ஜன்னல் கம்பியை இறுக்கப் பிடித்தபடி தன்னை மறந்து கண் மூடி அயர்ந்தாள்.....

அவள் கண்களின் காயங்கள் அவளின் கன்னங்களில் காய்ந்து கிடந்தது....

அங்கும் இங்குமாய் Pranakshi யை தேடிய அந்த கடைசி 2 விழிகள், அவளின் இருக்கைக்கு பக்கமாக நெருங்க ஆரம்பித்தது!!!!!

அவளோ சற்று மயக்கம் கலந்த உறக்கத்தில் இருந்தாள்!!!!

அவளின் எதிரில் உள்ள இருக்கையில் அவன் அமர்ந்தான்!!!! அவளின் துப்பாட்டாவின் மறுமுனையை மெல்ல மெல்ல இழுத்து தன் கைகளில் ஓரு இருக்கமான முடிச்சி ஒன்றை போட்டான், Naresh!!!!

சக பயணி போல அப்படியே கைகளை அசைக்காமல் தன் இருக்கையில் தலை சாய்த்து படுத்துக்கொண்டான், Naresh!!!!

யார் இவன்???? எப்படி Pranakshi இவன் கையில்??!!!????!!!
Naresh!!!! அவள் மீது தீராத ஒருதலை காதல் மன்னன்!!!!

பல பதட்டத்துடன் பயணம், ரயிலின் வேகம், காற்றின் ஈரம்.... தான் யார் என்று மறந்து கண்மூடி தூங்கினாள் Pranakshi....
இரவு மெல்ல மெல்ல, ரயிலின் வேகத்துடன் கடந்து சென்றது....

அதிகாலை கதிரவன் சற்றே எட்டிப் பார்க்க, படக்கென்று விழித்துக் கொண்டாள் Pranakshi!!!
எதிர் இருக்கையில் இருக்கும் Nareshஐ கூட கவனிக்காமல் எழுந்து ஓட முயற்சி செய்தாள்!!!

ஒரு நொடிக்குள் அவளின் துப்பட்டா முகத்தில் இருந்து விலக, என்ன நடந்தது என்று யோசிக்காமல் திகைத்து நின்றாள்....

Naresh எழுந்து அவள் முன்னே அசையாமல் நின்றான்!!!!!

உறைந்து போய் நின்றாள் Pranakshi!!!!


-மௌனங்கள் ஆரம்பம் 1

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (3-Jan-21, 5:18 am)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
Tanglish : sollaamal soll
பார்வை : 484

மேலே