2021 - ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பஞ்சு போல் மனம் மிகவும் மிருதுவாகி
அஞ்ச வைத்த நோய்கள் அகன்று சென்று
நெஞ்சத்து பயங்கள் நீக்கம் அடைந்து
கொஞ்சமாக தொழில்கள் மேன்மை பெற்று
கெஞ்சிடும் வறியோரை வாழ்வில் உயர்த்தி
வஞ்சக உள் எண்ணங்கள் தன் வலுவிழந்து
மிஞ்சுமளவுக்கு தொழிலால் பொருள் சேர்ந்து
பஞ்சணையில் படுத்தவுடன் துயில் அணைத்து
நஞ்சையும் புஞ்சையும் அதிகம் விளைந்து
தஞ்சையின் நெல் குவியல் போல் மனம் மகிழ்ந்து
கிஞ்சித்தும் பயமின்றி நம் தொழிலில் உயர
வானுலுகை விஞ்சிய தமிழால் வாழ்த்துகின்றேன்
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Dec-20, 10:13 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 99

மேலே