ஆக்சிடோசின்

மடியில் தவழ்ந்து முலைப்பாலுக்கு முண்டும்
பஞ்சு மகவின் மழலை மஞ்சில் நனையும் நேரம்
பேறு கால பெரு வலியோ
உற்றவனின் குறுக்குபுத்தியின் சுருக்கு பேச்சோ
அவனை பெற்றவளின் பொறுக்க இயலா கருக்கு ஏச்சோ
பெற்றவளை காணா புலம்பின் புழுக்கமோ
எதுவோ எல்லாம் நொடியில் மாயும்
இவை இன்னல் இம்மி நேரம் இல்லாமல் இருக்கவே
அனிச்ச வாயால் அவள் பிள்ளை முலைக்காம்பு மீட்ட
அலையலையாய் அவளுள் ஆக்சிடோசின் சுரக்குது போலும்

எழுதியவர் : கொற்றன் (5-Feb-21, 9:37 am)
சேர்த்தது : கொற்றன்
பார்வை : 45

மேலே