த்+இருமனணம்

த் எனும் வல்லினம்
இதய மெல்லினமாய்
இனைந்திடும்
இடை இனந்தான்
திருமணமோ…..?


இசைத்தமிழ்தனை இணைத்து
இயற்றமிழ் அழைப்பிதழாய்
நாடகமாடிடும் இறை செயல்தான்
திருமனமோ…..?


நாற்றிசை உணர்ந்திட
முத்தமிழ் உணர்த்திட்ட
இருமன புணர்வுதான்
திருமணமோ….?


என் “துணை”க்கரம்
தந்ததொரு இலக்கணம் இதோ:
விழியோடு கண்ணீர் கரைத்து
மொழியோடு இதயமணைத்து
வழிதோறும் பாதையமைத்து
வலுவாயானவள் மனைவி….!

எழுதியவர் : xavier (5-Feb-21, 7:40 pm)
சேர்த்தது : xavier arun
பார்வை : 63

மேலே