மாற்றங்கள் வேண்டும்
மாற்றம் வேண்டும்
புதுமைகள் புலர
அனுபவங்களின் வரலாற்றில்
தொலைகின்ற தொலைத்திட்ட
அமைதியை தேடி ஓடி
அடைவோம் எதிர்காலம் ,
அசைக்க முடியா நம்பிக்கை
அதிசயம் படைத்திட
அன்பும் பண்பும்அமைந்திட்ட
மனிதம் எனும் போர்வைக்குள்
மனிதனை
பார்க்கவேண்டும் இனிதாய்,
அரசியலில் மாற்றங்கள்
அதுதான் வேண்டும் நாட்டில் ,
தன்னலம் மிக்க மனிதனின்
அற்ப சொற்ப சுயநலன்கள்
அறவே ஒழிந்திட
அடைவோம் மாற்றங்களால்
அழகிய புது வாழ்கை
ஏங்கி தாங்கி சுமந்திட
நாதியில்லை மனிதனுக்கு
மாற்றங்கள் வேண்டும் .