வண்ண உடையில்

ஆசிரியத்துறை பா

ஆண் ஆசைப்படுது பெண்ணாய் மாறவே
பெண்ணும் அதுபோல் நேரெதிராக
வண்ண உடையில் முதற்கொண்டு
வளமாக்கும் அலங்கார பொருட்கள் வரையில்

முடிக்கு வர்ணமும் முகத்திற்கு எழில் மாவும்
கொண்டை ஊசிக்கொண்டு கூந்தல் கட்டும்
குரலின் வளம் கொஞ்சும் தன்மையில்
செவியில் பல்நிற கல் வைத்த தோடணிந்து

பெண்களோ தேநீர் அங்காடியில் நின்றருந்தி
பெரிய இயந்திர வண்டியை தானே ஓட்டி
உள்ளாடையை மட்டுமே ஒய்யாரமாய் உடுத்தியே
ஊர்ஊராய் உதிர உறவுடன் மிடுக்காய் சுற்றியே

இறைக்கொடுத்த அருமைவுடல் பெருமை மறந்து
இளைத்தோர் நாங்களில்லை என்றே இறுமார்ந்து
காலத்து இயக்கத்தினை கண்டபடி மாற்றி
கானலாய் காணுவதற்கு மெய்யாய் பிம்ப நிலையிலே

யாதும் எதுவெனினும் பெண்மை கருசுமக்கும்
ஆண்மை கருயீனும் எதிர்த்து நிற்கும் காக்கும்
தேடியே அலையும் தன்னை மறந்தே சேகரிக்கும்
ஆதிமுதல் இதுவே முறையாம் மாறுது உணர்.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Feb-21, 11:07 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : vanna udayil
பார்வை : 64

மேலே