பொறு மனமே பொறு
உயிர் கொண்டோம்
தாயின் மடியில்;
உறைந்தால்
மண்ணின் மடியில்.
உன் வாழ்வின் பயணம்,
உந்தன் பிடியின் வழியில்.
இடைப்பட்ட நாட்களில்
இன்பமும் துன்பமும்
இயற்கையின் கை வண்ணம்.
இன்பத்தில் மலர்ச்சி,
துன்பத்தில் தளர்ச்சி
இவையாவும் உள்ளத்தால்
உருமாறும் உணர்ச்சி.
பொறு மனமே.. பொறு
பொறுமை உமக்கு
புதியது அல்ல.
பத்து திங்கள் பொறுமை கொண்டு
கருவறையில் இருள் சூழ்ந்து,
இடையூறும் பல கண்டு
நிலவொளியாய் நீ பிறந்தாய்.
நிலவில்லா இரவில்
வானில் இருள் மூட்டம்
நீ உணரும் வேளை உன்
வாழ்வில் ஒளி ஏற்றம்.
- ஸ்ரீ ஜனகா