கண்ணதாசன் கற்பனை

நீயும் நானும்
தேனும் பாலும் போல
கலந்திடுவோம் கனிந்திடுவோம்
கவலைகளை மறந்திடுவோம்

சலங்கை ஒலிகள்
அபிநயம் புரிய அதிசயம் நிகழ
தனிமையும் குளிர குளிர
தயக்கங்களை களைந்திடுவோம்

பூக்கள் திறக்கும் நேரம்
சலனத்தில் புதுராகம் பிறக்க
புலரியும் மோகனமாய் துளிர்க்க
பாடங்களை தொடர்ந்திடுவோம்

கொழுத்த மேகம்
விதைக்குள் நுழையும் மழையாக
கொதிக்கும் பாலும் வெண்மையாக
காவியம் படைத்திடுவோம்

தேன்கூடும் சுவைதேனும்
புது அருவியாய் உருவெடுக்க
வேகத்தில் அணையும் உடைய
இன்ப அலைகளில் நீந்திடுவோம்!
இன்ப அலைகளில் நீந்திடுவோம்!!...

எழுதியவர் : மேகலை (11-Feb-21, 10:00 am)
சேர்த்தது : மேகலை
பார்வை : 102

மேலே