மோகனாங்கி
பெருங் குரலெடுத்து
ஊளையிடுகின்றனர் எங்களை
பார்த்து விபச்சாரிகள் என்று
வாழ்வதற்கான வழிகளில்
இதுவும் ஒன்றென்பதை மறந்து
விருப்பதுடனோ விருப்பம்
இல்லாமலோ பசிக்காகவும்
வசதிக்காகவும் இரவுகளில்
விலையாக வேண்டிய கட்டாயம்
உடலையும் மனதையும் விற்கும்
பெரும் துணிச்சலே எங்கள்
வாழ்க்கையின் பெரும் முதலீடு
இளமை வரவேற்கப்படுவதும்
உடல்கள் சிதைக்கப்படுவதும்
தொடர் நிகழ்வாகிட இந்த வாழ்வு
இயல்பான துயரம் தான் எங்களுக்கு
தொடக்கம் என்றால் முடிவு உண்டு
என்பது ஆதி தொழிலாகிய இதற்கு
வாய்ப்பில்லை என்பது நிதர்சனமே.....