போதனை
நம் வாழ்க்கையில்
சிலரை .....
விலக்கி வைப்பதும் ...!!
சிலரிடம் இருந்து
விலகி இருப்பதும்
மிகவும் நல்லதே ...!!
எல்லோருக்கும்
நல்லவனாக யாரும்
இருக்க முடியாது...
அதுபோல்..நிச்சயம்
எல்லோரும் நல்லவர்
என்று சொல்ல முடியாது ..!!
மாறுபட்ட குணங்கள்
கொண்ட ...
மனிதர்கள் நிறைந்த
உலகத்தில் ...
வேதனைகளை
விலை கொடுத்து
வாங்கிவிட்டு ..!!
போதி மரத்தின்
போதனைகளை
நாடி சென்று
வாசிப்பதும்
கேட்க செல்வதும்..!!
கண் கெட்டபின்பு
சூரியனை நாள்தோறும்
வணங்குவதை போல்..!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
