உழைப்பு

அந்த பெரியவர்
இத்தனை வயதிலும்
உழைக்கிறார்
தங்கச்சுரங்கத்தில்
உழைத்தது போதாதென்று

மார்வாடிக் கடையில்
வேலைக்குப் போகிறார்
அவர்களின் பிள்ளைகளை
தன் பேரப் பிள்ளைகளைப்போல்
கவனித்துக்கொள்கிறார்
அன்பு நிறைந்தவர்
விசுவாசம் அவர் ரத்தத்தில்
ஊறிப்போன குணம்

ஆடு கறவைமாடு கோழி
போன்ற கால்நடைகளை
வளர்த்து தன் வருமானத்தைப் பெருதும் உயர்த்துகிறார்

சிறுவாடு சேர்த்துவைத்து
ஊரிலுள்ள தன் பேரக்குழந்தைகளுக்கு அனுப்புகிறார்

உழைத்து உழைத்து
உருக்குலைந்துப் போனாலும்
தன் உயிருள்ளவரை
உழைத்துக்கொண்டே இருப்பார்
உழைப்புக்கு அஞ்சாதவர்

அந்த அயராத உழைப்பு
அடங்கிப்போனது இன்று
அவரைச் சுற்றி கண்ணீர் வாசம் வீசிக்கொண்டே இருந்தது

அங்கே யாரோ சொன்ன
வார்த்தை என் காதில்
ஒலித்தது
பாவம் மனிதர்
சிதையில் வைக்கும்வரை
உழைத்துக்கொண்டே
இருந்தார் என்ற வார்த்தை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Feb-21, 6:25 am)
Tanglish : ulaippu
பார்வை : 2374

மேலே