காதலியின் பதில்
காதலியின் பதில்
நேரிசை ஆசிரியபபா
கண்ணே உன்னைக் காணக் கூடா
வென்று தடுக்க வெளியூர் காவலாள்
தினந்தோ றும்வர தடுப்ப தெப்படி
உரைப்பாய் எனக்குக் கண்ணே
திரைநீக் கவழி சொல்லிடு நீயுமே
கலக்கம் கொள்ள வேண்டாம் கண்ணா என்றவள் சொன்னது
நேரிசை வெண்பா
நீர்வந்தால் வாரான் வருவன்நீர் வாராக்கால்
தீர்த்துவி ளங்காது செப்பினள் -- வேர்த்திட
மீண்டு மவன்கேட்க நீளாற்றில் நீர்வருதல்
வேண்டிக் குறித்தே னென் றாள்
ஆற்றில் நீர்வந்தால் வரமாட்டான் நீர்வராவிட்டால் வருவன் என்றாளாம்
.......