கண்ணனின் ராசக் கிரீடை
கண்ணனின் விளையாட்டு ரசாக் கிரீடை
வண்ணன் அவன் மாமாயோன் பரமாத்மா
அவன்மீது காதல் கொண்ட கோபியர்
பரமாத்மவைத் தேடி திரியும் ஜீவாத்மா
இதோ கண்ணன் இவளுடன் அதோ
அங்கே பார்க்க மற்றொருவளுடன் கொஞ்சம்
திரும்பிப் பார்க்க ஒவ்வோர் கோபியருடன்
கைகோர்த்து சிரித்து விளையாடும் கண்ணன்
கண்ணா கண்ணா என்று கண்ணன் நாமம்
விண்னைதுளைக்க ஆடுகிறான் கண்ணன்
பாடுகிறான் ஆனந்த மாகவே கோபியருடன்
இதில் யார் கண்ணன் யார் அறிவார்
அதுவே அவன் செய்யும் மாயம்
தாயைத் தேடும் குழந்தை போல
ஜீவாத்மா பரமாத்மாவை பரந்தாமனை அந்த
நித்யனை சத் சித்த ஆனந்த விக்கிரகனை
பரமபுருடனைத் தேடி தேடி அலைய
மாயன் அவன் இப்படி நடத்தும்
விளையாட்டு ராசக் கிரீடை.......
காமம் க்ரோதம் லோபம் மதம்
ஏதும் இல்லா அரூப ரூபனின்
நித்திய விளையாட்டு முயன்றால்
என்னோடும் உம்மோடும் கூட கண்ணன்
விளையாட வருவான்.... கண்ணனை
அறிந்துகொள்வாய் மனமே மாயனை மாதவனை