திமிர் நிறைந்த
உறவென்ற பெயரில் பகையோடு வாழும்
திமிர் நிறைந்த மனிதரோடு வாழ்வும் உழலுதே
பிழையென்று சொன்னால் கொல்லும் பார்வையோடு
நம்மை கேவலமாய் பார்க்கும் பெரியகும்பல் சுழலுதே
அறநெறியோடு எதையும் அணுக்கமாய் பார்க்கும்
அமைதியான ஆளுமை கூட்டம் உலகில் குறையுதே
கலை நிறைந்த வாழ்வு களைந்திடும் வகையில்
கருத்தில்லா பழக்கம் எழிலாக எங்கும் வளருதே
தகுந்தவை யாவும் சிறந்தது இல்லை என்று
தவறான எண்ணம் தழைத்து எங்கும் ஓங்குதே
அரணாக நம்மை அரவணைத்த இயற்கை மருந்துகள்
அதன் வீரியம் குறையாமல் என்றும் காக்குதே
அழியாத கலையை அழகிய தமிழில் முழுதாக சொன்ன
அறிவான தமிழ் குலத்தை என்றும் போற்றுவோம்.
------ நன்னாடன்.