நீ எதுக்கு ஏங்கிட்ட போசல

எப்போதும் வசந்தக்கலாமாய் மலர் மணம் வீசும் அச்சுழலில் ஒரு அழகிய அன்பு நிறைந்த வீடு. அவ்விடம் அப்படித்தான் இருக்கும்.
ஏனெனில் காவேரி அங்குதான் பிறந்து , வளர்ந்து பின் தன் தமிழ்மக்களை மகிழ்விக்க ஓடோடி வருவாள். சூரியன் உச்சிக்கு வந்தாலும் , சூடு உரைக்காது எந்த ஒரு காலத்திலும் ஏதாவது ஒரு மலராவது பூத்துக்குலுங்கி மணம் வீசிக்கொண்டிருக்கும். சுத்தமான காற்று, அல்லிஅரவனைக்கும் தென்றல், காதிர்கினிய பறவைகளின் குரல், மனதை மென்மையாக்கும் மேகம் சூழ்ந்த குடகு மலைத்தொடர்கள். இவற்றைஎல்லாம் தோற்கடிக்கும் அன்பு மட்டுமே நிறைந்த வீடு. அதில் உச்சி நேரத்தில் நடந்த ஒரு நிகழ்வு.......
அவ்விட்டினுல் அன்னை தனது இரண்டவது பெண் குழந்தையை தூங்கவைக்கும் முயற்சியில் இடுபட்டுகொண்டிருந்தாள். மூத்தபிள்ளை மூன்றாம் அகவையை தொட்ட ஆண் பிள்ளை . வீட்டின் பின்புறம் உள்ள தோட்டம் போன்ற பகுதியில் ஏதோ மும்மரமாக செய்துகொண்டிருந்தான்.
" தம்பி என்னட செய்யுற....?" . என்ற அன்னையின் குரலுக்கு "துணி தொவைக்குரேமா ... " - அவனின் பதில். "தண்ணியில வெலதடாச்சாமி சலிபுடிக்கும். "

"ம்ம்ம்ம்"

அன்னையின் வேண்டுகோளுக்கு அது மட்டும் பதிலாய் வந்தது. இருந்தும் தமது காரியத்தில் அச்சிறுவன் சிறிதும் பின்வாங்கவில்லை. அவனுடைய காற்சட்டையை கழட்டி பெரிய தண்ணீர் நிறைந்த பத்திரத்தில் போட்டு அலசிகொண்டிருந்தான். மேலும் சில சிறு துணிகளை அதனுடன் செர்த்துக்கொண்டன். பின் அடுக்கரைக்கு சென்றவன் அங்கிருந்த டப்பாவில் நிரப்பப்பட்ட சலவை பொடியை எடுக்க முற்பட்டான், முடியவில்லை . தளராத அவன் ஒரு சாய்விருக்கையை இழுத்துவந்து அதன் மீதேறி அதனை எடுக்க முற்பட்டான் இம்முறை வெற்றி...
சந்தோசத்துடன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு வந்தவன் மூடியை திறந்து இருந்த அனைத்து பொடியையும் நீரில் கொட்டி, மீண்டும் அச்செய்கையில் ஈடுபட்டான்.

குழந்தை தூங்கியவுடன் வெளியில் வந்த அன்னைக்கு அதிர்ச்சி, அவன் செய்த காரியத்தில் கோபம்கொண்டு அவனை வசை பாடிக்கொண்டே இரண்டு , மூன்று அடிகளை காலில் கொடுத்தாள் அவனுக்கு தெரியும் தனது செய்கை தவறு என்று. அழாமல் இருந்தான், அவனை இழுத்து வந்து அடுக்கரையில் இருந்த இருக்கையில் உட்கார வைத்து அவனது நனைந்த சட்டையை கழட்டினாள்.

. "ஏய்.... எந்திருக்க கூடது, குழிக்கனும் நா..போயி என்னை எடுத்துகிட்டு வர்றேன் ". என்று
மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.

அம்மணமாக அமர்ந்திருந்த அவனுக்கு அடிக்கும்போது வராத அழுகை இப்போது ஆத்திரத்துடன் வந்தது கண்ணிர் மலைமலையாக கொட்ட கதறினான், அதுவும் உரத்த குரலில்...

உள்ளே சென்ற அன்னைக்கோ அதிர்ச்சி , ஓடிவந்தால் தன் செல்ல மகனிடம் , அடித்த இடத்தை தடவிக்கொண்டே "என்னட சாமி வழிக்குதா..? என்று வினவினாள். அவனிடம் இருந்து ஒருபதிலும் வரவில்லை.

மீண்டும் ஒருமுறை அழுதான். ஒருவழியாக அவனை சமாதன படுத்தினால்... சாரிட....தங்கம் , அம்மா ஓ.. நல்லதுக்குதானே அடிச்சேன். தண்ணியில நனைஞ்ச சளி புடிக்குமுல்ல ...? அப்புறம் சிம்மி டாக்டரு ஊசி போடுவாருள்ள..? என்றாள்.

ஒருவழியாக அழுகையை நிறுத்தியபின் அவன் கூறினான்..." நீ எதுக்கு ஏங்கிட்ட போசல.. ? அக்கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு...

"அடித்த பின் அன்னை அவனை அணைக்காமல் போனதாலோ....?"

எழுதியவர் : சிவகுமார் (19-Feb-21, 5:48 pm)
சேர்த்தது : சிவா ஆலத்தூர்
பார்வை : 144

மேலே