💙இறுதியில் சிக்சர் 💗அடித்த காதல் 🏏

என்னடா பவுலிங் போற ... பந்து ஒழுங்கா போடு ... எத்தனை தடவ சொல்றது உனக்கு ,சிந்தனை எல்லாம் கிரிக்கெட்ல இருக்கணும் வேறு எங்கேயேச்சும் போன இப்படிதான் டா ஆகும்.உடனே,அப்படி ஒன்னு இல்லை கோட்ச் என்று சொல்லிவிட்டு பந்தை பிடித்து பவுலிங் போட்டவுடன்,மச்சான் பந்து காணோம் டா ....பக்கத்து க்ரவுண்டுல விழுந்துடுச்சி ,டேய் உதயா நீ சிக்சர் அடிச்சட்ட டா ...இதே மாதிரி நீ காதலிலும் சிக்சர் அடிக்க வாழ்த்துக்கள் மச்சா என்றான் சுந்தர் ."என் வாழ்க்கையின் முதலும் அவள் ...என் சுவாச காற்றும் என்னவள் " என்று தனக்குள்ள சொல்லிக்கொண்டான். அவளிடம் எப்படி சொல்வது தயங்கி கொண்டே "என்னங்க கலர் போட்டோ போட எவ்வளவு ஆகும்" அதுவா எண்பது ரூபாய் ஆகும் உதய். ஏ! நீ போட்டோ போட போறியா, ஆமா உதய் உங்க கடையில காரண்ட் இல்லையா இங்க வந்து போற ...அது இல்ல உடேனே, ஷாலினி என்ன இல்ல காரண்ட் இல்லை சொன்ன அதுவா ! அயோ ! உங்கிட்ட எப்படி சொல்வேன் என்று திருதிருவென விழித்து  கொண்டிருந்தான் உதய். உதய் இன்னிக்கு உனக்கு காலேஜ் இல்லையா ! காலேஜ் இருந்தது ஷாலினி ஆனால்,நான் போல, இன்னிக்கு மேட்ச் இருந்தது. அதனால் தான் காலேஜ் போல ,மேட்ச் முடிச்சிட்டு பார்ட் டைம் வேலைக்கு கரெக்ட் டெய்ம்க்கு வந்து இருக்கு . ஒ! சரி உதய் நாளைக்கு பாக்கலாம் .எனக்கு பஸ்க்கு டைம் ஆச்சு .நான் கிளம்புறேன் உதய்...என்றால் ஷாலினி. உதய்க்கு மூச்சு விடுவது கூட மிக சிரமமாக இருந்தது.சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் போவதை நினைத்து மிகவும் மனம் வருந்தினான். அன்று இரவு பனிப்பொழி அனலாக தகித்தது அவன் உடலை ... குளிர்காற்று மேனியை உரசும் போது உணர்விழந்து கிடந்தான் உதய். வானம் முழுவதும் நட்சத்திரம் இருக்கு ஆனால், அந்த வெண்ணிலவை காணமே என்று என்றுமில்லதா ஏக்கத்தோடு நாலு திசையிலும் பார்க்கிறான் நிலவை காணவில்லை ! மேகம் மறைக்கவில்லை நிலவை ... அந்த நிலவை தன் இதயத்தில் வைத்திருப்பதை நினைக்கு போது இதயம் துடிப்பு மேலும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது . தன் காதலியை நினைக்கும் உதயின் செவ்விதழ்கள் சிரித்து மலருகிறது ,கலீரென்று சிரிக்கிறான். நாட்கள் செல்ல செல்ல உதயின் காதல் மேலும் மேலும் அதிகமானது. உதயின் மேட்ச் எப்போதும் போல் சென்றது .மேட்ச் முடித்து வந்தவுடன் ஷாலினி இன்று என்னுடைய மேட்ச் எப்படி போச்சு தெரியுமா ! பவுலிங் வேற லெவல் ஷாலினி. இன்னிக்கு நடந்த போட்டியில் எங்க டீம் தான் வெற்றி பெற்றது . அப்போ நாங்க எடுத்த போட்டோ பாரு ஷாலினி .இந்த போட்டோவில் நான் எப்படி இருக்க ...ரொம்ப அழகா இருக்க உதய்  அப்படி சொல்லமாட்டேன். ரொம்ப அசிங்கமா இருக்க என்று சொல்லிவிட்டு தலையை கீழே சாய்த்து போட்டோவில் இருக்கும் உதயின் முகத்தை பார்த்து சிறு புன்னகையோடு உதய் நான் சும்மா சொன்னேன் நீ அழகா இருக்க. இருவரின் வாழ்க்கையும் காதலும் ,சிறு சண்டைகளுடன் சென்று கொண்டிருந்த நிலையில் , ஷாலினிக்கு கல்லூரி சீட் கிடைத்துவிட்டத்தால் கல்லூரில் சேர்வதற்காக ஷாலினி சென்னை சென்று விடுகிறாள். உதயாவிற்கு இந்த செய்தியை ஷாலினி வேலை பார்த்த போட்டோ கடையில் சொல்கிறார்கள் .ஷாலினிக்கு நாளைதான் கல்லூரி சேர்வதற்கான கடைசி நாள் அதனால், எங்களிடம் தொலைபேசியின் வழியாக சொல்லிவிட்டு இரவு பஸ் பிடித்து சென்றுவிட்டாள் உதய் . உதயா இதை கேட்டுவிட்டு அதன்பிறகு அங்கிருந்து வீட்டிற்கு சென்று விடுகிறான். தன் தொலைபேசியை எடுத்து ஷாலினியின் தொலைபேசி எண்னை தேடுகிறான் .ரொம்ப நேரம் தேடியும் தொலைபேசி எண் கிடைக்காத போது காதலும் கண்ணீரும் சேர்ந்து அவன் நெஞ்சை பிழிக்கிறது . ஐயோ! ஷாலினி தொலைபேசி பயன்படுத்துவது இல்லை என்பது அப்போது தான் உதயாவிற்கு நினைவிற்கு வருகிறது ."காதல் தோல்வியை கூட தாங்கி விடலாம் ஆனால் ,இந்த தொலைத்தூர காதல் மிகவும் வேதனை தந்து சுவாசத்தை சேர்த்து அடைத்து விடுகிறது" . உதயா நினைவுகளில் அவள் மட்டுமே இருந்தாள்.
ஒருவருடம் சென்றுவிட்டது . ஷாலினியின்
உள்ளம் அவன் நினைவுவை கொண்டு தினம் தினம் தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொள்கிறாள். காமம் சேராத காதல் அது ! "இரு இதழ்கள் நெருங்கி வந்தது .மூச்சுக்காற்றின் வேகம் இருவரின் நாசிக்குள் இறங்கியது .சொல்ல முடியாத அளவு காதல் கரைபுரண்ட நேரம் அது" ! ஷாலினியின் புதிய தொலைபேசியில்  முகநூலின் வழியாக அவனை தேடி பார்க்கிறாள். அவளுக்கு எந்த வித முகவரியும் தெரியவில்லை.அவன் பெயரை தவிர ,வாழ்க்கையின் இடையில் வந்தவன் இப்போது இதயத்தில் இறங்கி என் மனதை இப்படி துளைக்கிறானே !...ஒவ்வொரு நாளும் இப்படியே போக, தேடி பிடித்துவிட்டால் முகநூலில் அவனை , உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவனிருகில் இல்லை , மார்பின் மீது சாய்ந்து அழ அவன் அருகில் இல்லை ... ஷாலினி கைகள் படபடத்தது ,நெஞ்சில் புது வித மகிழ்ச்சி வாழ்க்கையின் தேடல் கிடைத்துவிட்டது அவளுக்கு . ஹாய் உதய் ,சேப்பாக்கத்தில் எப்ப விளையாட போற ....உனக்காகவே காத்திருக்கிறேன் ...உன்னுடைய மேட்ச் பார்க்க ஆவலா இருக்க உதய் ...ஹலோ நீங்க யாருங்க... உங்க பேரு சொல்லுங்க,உடனே ஷாலினி என்ன உதய்   என்ன தெரியலையா என கேட்கிறாள். அதற்கு உதய் தெரியலைங்க ...அப்படியா ! சரி ,உன்ன ரொம்ப மீஸ் பண்ற டா ... என்னங்க உங்க பேரு சொல்லுங்க என்கிறான் உதய் .ஷாலினி அவன் மெசேஜ் பார்த்து சிரித்து கொண்டு "டேய் என்னடா தெரியலையா ,இப்படி அப்பாவியா இருக்கியே டா " தன் மனதிடம் சொல்லிவிட்டு ...வெட்கத்தோடு உதய் ஐ லவ் யூ  ....நான் உன்னை காதலிக்கிறேன் ... "நீ இல்லாம என்னல வாழ முடியாது " உதய் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ! உதய் ... உதயாவால் எதுவும் பேச முடியல ,யாரு நீங்க என கேட்கிறான். சற்று நேரம் சிந்தனை முழுவதும் ஷாலினி மீது செல்கிறது . ஷாலு வா  ஆமா ! உதய் என்கிறாள் . ஐ லவ் யூ ஷாலினி ... எனக்கு என்ன சொல்றதுனு தெரியல ஷாலு .... நீ  இல்லாத ஒரு வருஷம் உன் நினைப்பு சொல்ல முடியாத வலி தந்துச்சி ஆனால் ,இப்ப எல்லாம் மாயம் போல் மறைஞ்சிடுச்சி ... ஷாலினி .உடனே , ஷாலினி , உதய் எப்ப சேப்பாகாத்துல உன்னுடைய மேட்ச் நான் பார்க்க போற என கேட்க உதயாவின் மகிழ்ச்சி மனசு முழுக்க சிக்சரில் மிதந்து .....ஷாலினியுடன் .....
                                           
                                              நன்றி !

எழுதியவர் : பூமணி. க (18-Feb-21, 11:24 am)
சேர்த்தது : பூமணி
பார்வை : 521

மேலே