இதுவா பொதுக்கூட்டம்

இதுவா பொதுக்கூட்டம்?
@@@@@@@@@
ஏய்யா உங்கிட்ட என்ன சொன்னேன்?
@@@@@@#
ஐயா.போன தடவை ஆளுக்கு இருநூறு தர்றோம்னு சொல்லி 1,000 பேரைக் கூட்டிட்டு வந்தேன். கூட்டம் முடிஞ்சதும் பணம் தரப்படும்னு சொல்லி வச்சேன். ஆனா நாம தரல. அதனால இந் தடவை மக்கள் நம்மள நம்பல..அதானல.காலி நாற்களிகள்.உங்களோட கட்டளைப்படி பெருந்திரள் கூட்டம் நடத்த இந்தத் தடவை நம்ம பொருளாளர் மாவட்டத் தலைவர்கிட்ட ஐயாயிரம் பேரை அழைச்சிட்டு வர பதினஞ்சு இலட்சம் குடுத்தாரு. ஆனா பணத்தை வாங்கிட்ட மாவட்டத் தலைவர் வெளிநாட்டுக்கு ஓடிப்போயிட்டாருங்க.அங்க.அவரு.மகன், மகள் இருக்கிறாங்க..நான் ஃபோன் பண்ணிக் கேட்டபோது "போடா நீங்களும் உங்க கட்சியும்"னு சொல்லிட்டு "இனிமே நான் உங்க கட்சிக்காரன் இல்லை. இந்தியா வரப்போவதில்வை"னு சொவ்லிட்டாருங்க ஐயா.
**************
அட துரோகி. ஏய்யா.முதல் வரிசையில உட்ஙார்ந்திருக்கிற நூறு.பேரு தலைக்கு ஐநூறு வாங்கிட்டு கைதட்டி விசிலடிக்கிறவங்க..அவுங்களுக்கும் ஒலி பெருக்கி அலங்கார மின்விளக்குகளை அமைச்சுக் கொடுத்தவங்களுக்க எப்படி கூலி குடுக்கிறது? சரி சரி. இந்தா இந்த அஞ்சு பவுனு.சங்கிலியை ஒரு.சேட்டு கடையில அடமானம் வச்சு பணம் வாங்கிட்டு வா.
"***************
தலைவரே, சேட்டுங்க எல்லாம் இந்நேரம் கடைய மூடிட்டு வீட்டுக்கு போயிருப்பாங்களே.
*********************
கதவைத் தட்டி எழுப்பியாவது தங்கச் சங்கிலியை அடகு வச்சு பணத்தை வாங்கிட்டுவாயா..
##$$$$$$$$$$#
ஐயா, இன்னோரு விசயமுங்க.
**************
சொல்லுயா. நீங்க மேடையில பேசிட்டிருக்கிறபோது பத்திரிக்கை டீவிக்காரங்க எல்லாம் படம் எடுத்தாங்க. வாடகைக்கு எடுத்த பிளாஸ்டிக் நாற்காலிகள் 4, 900 நாற்கலிகள் காலி. கைதட்ட, விசிலடிக்க வந்தவங்க மட்டுமே டீவிக் காட்சியிலும், செய்தித்தாள் படங்களிலும் தெரியுவாங்க. காலி நாற்காலிகளப் பத்தி நம்ம எதிர்கட்சிக்காரங்க நக்கலா பேசுவாங்க ஐயா?
############
அட போய்யா. இதெல்லாம் நமக்கு புதுசு இல்ல. இனிமே நடிக்க வாய்ப்பு இல்லாத பத்து நடிகர் நடிகைகளை அழைச்சிட்டு வந்து மேடையில் குத்தாட்டம் போட வச்சா செலவு இல்லாம பெருந்திரள் கூட்டம் நடத்தம். கூட்டம் முடியற வரைக்கும் அரை மணிக்கு ஒரு தடவை குத்தாட்டம் ஆடவச்சா கூட்டம் கலையாது. இதை முன்கூட்டியே மக்களுக்கு அறிவிச்சிடணும்.
*****************///
நல்லதுங்க ஐயா..

எழுதியவர் : செல்வம் (20-Feb-21, 8:24 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 67

மேலே