கண்கண்டக் காதலன்

நேரிசை வெண்பா

முன்பின் தெரியா தொருவரைக் தேர்ந்தது
என்னிரு மைகொள் விழிகளே --- இன்றென்ன
என்னவரைக் காணாது கண்ணீர் விடுதலும
நன்நகைப் பிற்கிட மாம்

குறள் 3 / 10

திடீரென்று பார்த்த ஒரு ஆணை காதலனாக ஏற்றுக்
கொண்ட கண்கள் அவனைக் காணாதபோது ஏனோ
அதேக் கண்கள் கண்ணீர் விடுவது கேலியாகவும்
நகைப்பிற்கு இடமளிப்பதாகவும் இருக்கிறது.



......,




..........

எழுதியவர் : பழனிராஜன் (21-Feb-21, 6:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 219

மேலே