மேகத்தின் மீது நான் கொண்ட மோகம் - கவிஞன் வளர்ப்பிறைதாசன்

மேகம்..........
காலை கதிரவன் கவர்ந்து அழைக்க.........
காற்றும் உன்னை சேர்ந்து அழைக்க.....
நீ........
மரத்தில் இருக்கும் தேனடையோ?
இல்லை .........
மனிதன் உடலில் போர்த்திய மேலாடையோ?
சிற்ப்பி செதுக்கிய சிலையோ?
இல்லை........
கவிஞன் கண்ட அற்புத கலையோ?
ஒரு வேளை........
உழவன் விதைத்த விதையோ?
ஓவியன் சிந்திய வண்ணங்களோ?
இல்லை..........
கவிஞன் வளர்ப்பிறைதாசன் மனதில் தோன்றிய எண்ணங்களோ..................?
மழைக் காலங்களில் மேகங்களும் கரைவு
இத்துடன் என் கவிதையும் நிறைவு .

-கவிஞன் .வளர்ப்பிறைதாசன் .

எழுதியவர் : கவிஞன்.வளர்ப்பிறைதாசன் (21-Feb-21, 12:13 pm)
பார்வை : 192

மேலே