மச்சான் கட்டிகிட்டான்

மச்சான் கட்டிகிட்டான்!

மச்சானெ மரத்துப் பின்னாடி
ஒளிஞ்சுகிட்டு பாக்குறேன் நான்
ஆளுல்லாத நேரத்துல
இடுப்பு துணிய கழட்டிப் போட்டு
வீட்டு காளை தோத்தது போல
விரைச்ச மாரைக் காட்டிக்கிட்டு
பொறந்த புள்ள போல உடுப்பில்லாம
கொளத்து தண்ணியில
கால மொள்ள நனைச்சுக்கிட்டு
திமிங்கலம் போல ஆழத்துல
நிமிசத்துல அமுந்துப்புட்டான்;

அஞ்செட்டு நிமிசமாச்சு
ஆள காணவில்ல
பக்குன்னுது ஏம்மனசு
அடிவயறு கலக்குறது
கரையாண்ட வந்து நானும்
அசவில்லாத தண்ணிய
பாக்குறேன் ஏக்கத்தோடு
ஏன்கண்ணே பட்டுடுத்தோ
மாரியாத்தா மன்னிச்சுடு
மலைக்கு நானும் வந்து
புரண்டு கும்பிடறேன்;

பின்னால சலசலப்பு
ஏன் மச்சான் சிரிச்சிகிட்டே
வெறும் உடம்போட கட்டிக்குது
காதைக் கடிச்சுகிட்டு
சொல்லுது எங்கிட்ட
இப்பவே கட்டிக்கிட்டேன்
சூடு தலக்கேறி
கண்ணும் இருண்டுட்டுது
நாயனமும் மேளமும்
மழையோட சேந்து கொட்டுறது!

சம்பத் குமார்
கல்கத்தா

எழுதியவர் : சம்பத் குமார் கல்கத்தா (21-Feb-21, 11:59 am)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 99

மேலே