சகிப்பின் சிகரம் பூமித்தாய்

இந்த பூமி நம்ம பூமி
எந்த எதிர்பார்ப்பும் இல்லாது நம்மை
வாழவைக்கும் பூமி எதைத்தான் தாங்கவில்லை
நமக்காக நம்மை வாழவைக்க பூமி
அன்னை இயற்கையையே நமக்காக
சுமக்கிறாள் ... மழைக் கடல் நதிகள்
காடுகள் வனங்கள் கொடிச்செடிகள்
பசுக்கள் மாடுகள் ஆடுகள் ஏனைய
எத்தனையோ அத்தனையும் ..... இவை எல்லாம்
பூமிக்கு சுமை அல்ல.... அன்னை
அவள் 'நம்மையே... ஆம் மனிதர்
நம்மையே அல்லவா தாங்குகிறாள் நமது
அட்டூழியங்கள் பாவங்கள் அத்தனையும்
தனது கணவன் பிள்ளைகள் செய்யும்
குற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் பேரன்பு
தாய்ப் போல .... பூமியே சகிப்பின்
உன்னத சிகரம் நீயே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (23-Feb-21, 1:33 pm)
பார்வை : 87

மேலே