காலம்

காலமெனும் கடிகாரம்
நம் வீட்டு கடிகாரத்தை
ஆட்டிவைக்க இந்த கடிகார
ஆட்டத்திற்கு நாமெல்லாம் ஆட
பழுதடைந்த கடிகாரம் ஒருநாள்
ஓடாது நின்று போகிறது
மீண்டும் ஓடாது,,,,, ஆனால்
காலமாம் கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Feb-21, 7:57 pm)
Tanglish : kaalam
பார்வை : 91

மேலே