மண்ணை மனிதனாய் நினைத்தால்

மண்ணை மனிதனாய் நினைத்தால் !

மண்ணுக்கும் மணம்
உண்டு மழை
துளிகள் விழும்
போதுதான் அறிய
முடிகிறது

மண்ணுக்கு மனமும்
உண்டு விவசாயி
மனம் குளிர
சாகும்படி தரும்
போதுதான் தெரிகிறது

மண்ணுக்கு குணமும்
உண்டு மனிதன்
எவ்வளவு சுரண்டினாலும்
அமைதி காத்து
அவனையும் தாங்கி
நிற்கிறது

மண்ணுக்கு அழுகையும்
வரும் என்று
அதனை குத்தி
கிழித்து உள்ளிருந்து
வெளிவரும் போதுதான்
தெரிகிறது

மண்ணுக்கு கோபமும்
வரும் என்பது
ஒரு நொடியில்
தன்னை உலுக்கி
சராசரங்கள் அனைத்தும்
நாசமான பின்னால்தான்
நமக்கு தெரிகிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Feb-21, 10:18 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 87

மேலே