மலர்
மலரே
நீ பூத்து குலுங்குகையில்
காற்றுக்கு அசைகையில்
மெல்ல மயங்குகிறது
என் மனம்
மலரே
உனக்கு உன் வண்ணத்தை
தந்தது யார்
மலரே
நீ மலரும் நொடியில்
காற்று வந்து
தூரிகை விரித்து
வண்ணம் தீட்டியதோ
மலரே
உன்னை சிந்திக்கையில்
என்னை சபரிசிக்கும் மென்மை
எதுவோ
மலரே
எது எதுவானாலும்
உன்னை தாங்குவதில்
மகிழ்கிறேன் நான்