வானவில்
எழுநிறங்களில் வண்ண வண்ண வானவில் பழுதேதும் பதிந்து போகாது பிம்பமாய்
வந்து பதிந்து நின்றது தடாகத்து
களங்க மில்லா படிக நீரின்மேல்
நீலவானில் வந்திருக்கும் வானவில் அழகே
தடாக நீரில் நான் பார்ப்பதோ நீரின்கீழே
முளைத்த வானவில் வானமே கீழே
பெயர்ந்து நீரில் வந்தெழுந்தது போல்
அசலைவிட நகல் இன்னும் அழகோ
அடுத்த முறை நீங்கள் இவ்விதம்
வானவில்லைக் கண்டால் கண்டு உங்கள்
பதிலைக் கொஞ்சம் கவிதையாய் எனக்கு
சொல்லுங்கள் பார்ப் போம்