ஏக்கம்

காண்பது பகல் கனவோ

வின்வெளியில் நீயும் நானும்… 

நடந்து செல்லவில்லை 

மிதந்து செல்கிறோம்… 

மின்னும் அனைத்தும் 

நம்மை நகலெடுத்தது… 

காணும் யாவும் நாமாய்

கடந்து வர மனமில்லை… 

நிழலும் நீங்காமலிருக்க

கனவை கலைத்து விடாதே… 

கனவே நீண்டுவிட்டால்

விடியலே தேவையில்லை…

எழுதியவர் : இந்துமதி (26-Feb-21, 9:23 am)
சேர்த்தது : indhumathi
Tanglish : aekkam
பார்வை : 158

மேலே