என்னவளுக்காக

நீ வேண்டுமடி என்னுடன் ஒரு ஒரு நொடியும்
உன்னை நினைத்து நினைத்தே செல்கிறது … என் காலங்கள்
நீ என்னைப்போல் தான் சிந்திக்கிறாயோ…
இல்லை என்னை முட்டாள் என்று உதறிவிட்டாயோ
பரபரப்பு வாழ்க்கையடி எனது…
இதிலும் உன் நிணைவு மட்டும் கண்ணனுக்கு முன் ஒட்டிய சுவரொட்டிபோல
அணைத்து சிந்தனைகளிலும் ஏனோ உன் முகம் வருகின்றது இறுதியில்
பைத்தியமா என்று எனக்குள் ஆயிரம்முறை கேட்டிருக்கிறேன்
உன்மேல்தான் என்கின்றது என் மணம் கூச்சத்தோடு என்னிடம்
இணைய முடியாதா வாழ்கை என்று உணராத அறிவுக்கு
எட்டியது எல்லாம் உன் நினைவுகள் தான்
கவிதை எழுத எண்ணவில்லை….
உன்னை பற்றி நான் எழுத நினைப்பது எல்லாமே கவிதையாகவே தோன்றுகிறது
உன் கைகோர்த்த காலங்கள் என் மூச்சோடு கலந்தது
உன் அருகாமை என்னை செயல் இழக்க செய்யும் இயந்திரம்
உன் கண்ணீர் என் உயிர் குடிக்கும் விஷம்
உன் முத்தம் என் வாழ்க்கையை ரசிக்க வைக்கும் வரம்
உன் சிரிப்பு என்னை சிரிக்க வைக்கும் நகைச்சுவை
நீ கிடைக்க எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று தேடுகிறேன்
இறைவா…. நான் எந்த பாதையில் சென்றாலும் அவளிடமே சேர்த்துவிடு என்னை ……
எனக்கு இருக்கும் தவிப்பு என் அருகாமைக்கு உன்னக்கு உண்டோ என்றல் …??
ஒரு வேளை நீ என்னை சுமை என்று நினைத்தல் ….
நினைக்கிறாய் என்று தெரிந்தாலே…. என் நிழல் கூட உன் திசை திரும்பாது
என்னுடன் புதைப்பேன் என் காதலை…
என்னவளுக்காக….

எழுதியவர் : (25-Feb-21, 7:28 pm)
சேர்த்தது : Vinu
Tanglish : ennavalukkaga
பார்வை : 567

மேலே