புது மனிதன்

அலைந்து அலைந்து
அமைதி இழந்த மனிதன்
அமைதியை தேடி
கடற்கரைக்கு சென்றான் ...!!

அங்கே ...ஓய்வின்றி
உற்சாகம் குறையாமல்
அலைந்து திரியும்
கடல் அலைகளை
பார்த்து ...பார்த்து ..

மனம் அமைதி அடைந்து
உற்சாகம் கொண்டு
புத்துணர்ச்சி பெற்று
புது மனிதனாக
புறப்பட்டு செல்லுகிறான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Feb-21, 5:51 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : puthu manithan
பார்வை : 214

மேலே