முப்பொழுதும்
இறவா இரவுகள் வேண்டுகிறேன் இதமளிக்கும் உன் அணைப்பு நீளுமானால்..
மறையா மாலை வேண்டுகிறேன் உன் மடி மீது மயக்கம் தொடருமானால்..
தேன்காலை வேண்டுகிறேன் தேடும் பொருள் என்றும் நீயானால்..
முடியா நாள் வேண்டுகிறேன் முப்பொழுதும் உன் நினைவால் ஆகினால்..