தலைவி தலைவன் கலவி
தலைவி தலைவன் கலவி செய்து
பலவகை குழந்தைகள் பிறந்ததடா
குழந்தைகள் பிறந்த பின்னாளும்
கலவியின் செய்கை தொடர்ந்ததடா
ஈராறு குழந்தைகள் பிறந்தபின்னாள்
உண்ண சோறு யாருக்கும் இல்லையடா
நீராகாரம் பசி வேளைக்கு நிரம்பச் செய்து
குழந்தைகள் நீள்பசி போக்கினாள் அன்னையடா
உழைக்க வேண்டிய தகப்பன் அங்கே
ஒவ்வாத போதைக்கு அடிமையானான்
பன்னிரெண்டு வயது குழந்தை ஒன்று
பட்டாசு தயாரிக்கும் பணிக்கு சென்றதடா
பலவகை பணிகளை செய்து களைத்து
பணத்தினை கொண்டு சகோதர பசியொழித்து
பாலமாய் குடும்பத்தினை தினம் காத்து
பரம்பொருளாய் இன்றும் வாழுதடா
சிற்றின்ப சேற்றில் புரண்ட பெற்ற பன்றிகள்
சிறு குழந்தை உழைப்பில் உண்ணுதடா
குறிப்பிட்ட நாளில் குறியின் அளவு குறைந்தாலே
குறையில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமடா.
----- நன்னாடன்.