அவள் ஜெயித்தாள்

"சிரித்தாள்! அவள் இன்று சிரித்தாள் !
சிரித்தாள்! மனம் விட்டு
சிரித்தாள்!

நினைத்ததை முடித்ததில் சிரித்தாள்,
முடித்ததில் ஜெயித்ததால் சிரித்தாள்.

அடுப்பில் கனவை சமைத்து,
இடுப்பில் குழந்தையை
சுமந்தாள்.

கடமையில் துணிகளை
துவைத்து,
மனதில் ஆசையை
சுவைத்தாள்.

அவள் உருவம் கண்டது
இரு வாழ்வு ,
இதயம் கொண்டது ஒரு கனவு.

சிறகில்லா பறவை !
கொஞ்சமாய் திறந்தது கதவை!

புதிய வானம் தெரிந்தது,
அதில் இனிய ஞானம்
பிறந்தது.

கனவும் நனவும் இணைந்தது,
இதுதான் வாழ்வென்று நினைந்தது.

மறந்தது கவலை ,
பறந்தது வெளியே
கிணற்றுத்தவளை !

நினைத்ததை முடித்ததில் சிரித்தாள்,
முடித்ததில் ஜெயித்ததால் சிரித்தாள்."

எழுதியவர் : Lakshiya (3-Mar-21, 9:50 am)
சேர்த்தது : Lakshya
பார்வை : 35

மேலே