தாய் ஓர் வரமல்லவா

அவம் என்னை ஆட்கொண்ட போதும் அஞ்சாமல் நிற்கிறேன் 
கலங்கினாலும் தேங்காமல் ஓடுகிறேன் உன் சங்கைபோல என்னை வளர்பித்ததால்
அறுசுவை உணவும் கும்பி நிறைக்கிறதே அன்று மனம் நிறைப்பதோ
நீ பருக்கும் ஒரு கைபிடி உணவே
பேதை என்றோஉன்னை
பலமுறை சாடிய போதும்_புள்ளுவமில்லா புன்னகையை  நீ உதிர்த்த போதும் புரியவில்லை இந்த பேதைக்கோ
நீ ஒரு மண்டென்பது
பலநூறு மயில்கலுக்கு அப்பால் இருப்பினுங்கூட குரலொழியின் சிறு இகல் கண்டு எப்படி என் முதிதை கணிக்கிறாய்  உன் மனக்காலதர் என் முகம் காட்டுகிறதோ உனக்கு???
சிறு பிணி கண்டு ஆதுலனாய் சேக்கை கண்டபோதும் என் விரல் தேடுவதோ உன் கரத்தினை மட்டுமே தாயே எத்தனைமுறை
சழக்குரக்க முயற்ச்சிபினுந் தோல்வியை மட்டுமே தழுவுகிறேன உன்னிடத்தில்
உன்னை காண ஏங்குகிறேன் ஒல்லம் கொண்டு விரைவில் வருவாயாக

எழுதியவர் : தீபிகா. சி (3-Mar-21, 11:50 am)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 544

மேலே