சினந்தணிக்க உருவானதாக

மாடு மேய்த்தவன் பாரதத்தின் இறைவனானான்
ஆடு மேய்த்தவனும் மேல் நாட்டின் இறைவனாக
எவ்வெழுத்தும் தெரியாதவன் இறை தூதனாக
சினங்கொண்டவனால் தலைப்பாகை கட்டியமதம்
மனம் பொருத்தவனால் புத்த பெயர்க்கொண்ட மதம்
நிர்வாணத்தை விரும்பியவனால் சைன மதம்
கல்லாதவர்களின் யூக கோட்பாட்டால் யூத மதம்
புத்தன் ஒத்த பகவுல்லாவின் எழுச்சியாலான பகாமதம்
கன்பூசியசின் கருத்தால் உருவான கன்பூசிய மதம்
இயற்கையோடு ஆவியை வழிபடும் தாவோயிய மதம்
சினந்தணிக்க உருவானதாக கூறும் சிந்தோ மதம்
என மதங்கள் தோன்றியது மதி சிறந்தோராலா வேறா
உழைக்காத மக்கள் உயர்வை வேண்டி நாடுமிடமாகவே
இன்றைய நிலையில் மதங்களின் தலைமையிடங்கள்
மனித மனம் மாற்றமடையவே தோற்றம் கண்டது
மதமென்ற பல்வகைத்தடம் இன்று இழி பாதை நோக்கி
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Mar-21, 9:04 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 155

மேலே