இவள் ராகம் பாடிய அதரமும், பரதம் சேர்த்த கண்களும்

சிவப்பு தாமரை மொட்ட விழ
பவளம்போல் நிறமேற்று அலர்ந்ததுவோ
எனநினைக்க வைத்த இவள் அதரம்
கொஞ்சம் துடிக்க வீணையிலிருந்து மெல்லிய
மோகன ராகம் இசைத்தது போலோர்
துள்ளல் எம்மனதில் ... கொஞ்சம் மேலேநோக்க
சுழலும் அவள் கயல் விழிகளில்
நளினம் கண்டேன் அவள் அதரம்
எழுப்பிய மோகனத்திற்கு பரதம் சேர்த்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Mar-21, 1:21 pm)
பார்வை : 161

மேலே