வெட்கத்திலே
கண்ணாடி கண்டு உன் பெயர் உச்சரிக்கும் நொடி மூழ்குது என் மனம் வெட்கத்திலே..
தாபம் தீர்க்க கண்தீண்டும் விரல்கள் போதும் மீளாமல் வீழ வெட்கத்திலே..
கணக்கில்லா உன் கள்ளப்பார்வை கிடத்தியது என்னை வெட்கத்திலே..
காதல் சொல்ல நீ சொல்லும் பொய்க்கவி சாய்த்தது வெட்கத்திலே..
லேசான உன் ஸ்பரிசத்தால் ஸ்தம்பித்தது என் இதயம் வெட்கத்திலே..
கொஞ்சம் கொஞ்சமாய் நான் வீழ்ந்தேன் உன்னில் வெட்கத்திலே..